Site icon Arul Isai

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு – பிள்ளையார் பாடல் வரிகள்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு - பிள்ளையார் பாடல் வரிகள்

ஓரானைக் கன்றை உமையாள் திருமகனை
போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தருந்தான்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை
ஆனந்தக் கூத்தரின் மகனே தில்லை
ஆனந்தக் கூத்தரின் மகனே பிள்ளையார்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு
வழியின்றி வேலனவன் திகைத்தான் குற
வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான் குற
வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான் மறு
கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் மறு
கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை அவன்
கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும் அவன்
நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்? அவன்
நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்?

பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்

பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email
Exit mobile version