பதஞ்சலி முனிவர் வழிபட்ட சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில்

பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமகாக விளங்கும் சிதம்பரத்தில் அனந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.. இக்கோவில் நடராஜர் கோவிலுக்கு நேர் பின்புறமாக அமைந்துள்ளது இக்கோவிலில் மூலவர் அனந்தீஸ்வரர், அம்மன் சவுந்தரநாயகி. உற்சவர் சோமாஸ்கந்தர். கோவில் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கெஜலெஷ்மி சனீஸ்வரர், நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளது.

சிவன் சன்னதி கோஷ்டத்தில் வல்லபகணபதி தெட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா உள்ளனர். இங்கு நடராஜருக்கு அருகில் பதஞ்சலி மகரிஷிக்கு தனி சன்னதி உள்ளது. கோவிலில் நுழைந்தவுடன் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இதற்கு அருகில் விநாயகர் உள்ளார். பிரகாரத்தில் அருகருகே சூரியன், சந்திரன் உள்ளனர். தீர்த்தத்தின் இடதுபுறமாக ராஜசண்டிகேஷ்வரர் இருக்கிறார்.

தலவரலாறு

பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் மஹா விஷ்ணூவை தாங்கிக்கொண்டிருப்பவர் ஆதிசேஷன், வழக்கத்தை விட சுவாமியின் எடை அதிகமாக தெரியவே அதற்கான காரணத்தை கேட்டார் ஆதிசேஷன். அதற்கு சுவாமி சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகமாக தெரிந்ததாக கூறினார் ஆதிசேஷன் தனக்கும் அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். பூலோகத்ததில் சிதம்பரம் சென்று வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி ஆதிசேஷன் பூலோகத்ததில் அத்திரிமகரிஷிக்கும், அனுசுயாவிற்கும் மகனாக அவதரிதார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார்

தில்லைவனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கி தீர்த்தம் உண்டாக்கி அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால் அனந்தீஸ்வரர் என்ற பெயர் எற்பட்டது. பதஞ்சலிக்கு அன்ந்தன் என்ற பெயரும் உண்டு. பின் நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார். இக்கோவிலில் பதஞ்சலிக்கு தனிச் சன்னதி இவரது நட்சத்திரம் பூசம் என்பதால், பூச நட்சத்திரதன்று விசேஷ பூஜைகள் நடைபெறும்.

யோகா சூத்திரத்தை எழூதியவர் பதஞ்சலி என்பதால் இக்கோவிலில் உள்ள தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. யோகாசன கலையிலும், கல்விக் கலைகளில் தேர்ச்சி பெறவும், நாகதோஷம் உள்ளவர்கள் நாகதோஷ நிவர்த்திக்கும் பதஞ்சலியை வணங்குகின்றனர். இங்கு ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை நாட்களில் பதஞ்சலி மகரிஷியும் புறப்பாடாவார். திருவாரூரை தவிர உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களிலுள்ள சுவாமிகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். நடராஜர் கோவிலில் நடக்கும் அர்த்தஜாம பூஜைக்கு மகரிஷிகளும், முனிவர்களும் வந்து தரிசிப்பதாக ஐதீகம் இவர்கள் உச்சிக்காலத்தில் இங்கு அனந்தீஸ்வரரை தரிசனம் செய்வதாக தலவரலாறு கூறுகிறது. உச்சிகாலத்தில் இத்தலத்தையும் அர்த்தஜாமத்தில் சிதம்பரம் நடராஜரையும் தரிசனம் செய்வது விசேஷம். இங்கு சூரியன் சந்திரனும் அருகே உள்ளதால் நித்ய அமாவாசை தலமாக கருதப்படுகிறது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பித்ருதோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்குள்ள சிவனையும் சந்திரன் சூரியனையும் வணங்குகின்றனர்

இக்கோவிலில் ஆனித்திருமஞ்சனமும் நவராத்திரி கந்தசஷ்டி அன்னாபிஷேகம் திருக்கார்த்திகை மார்கழி திருவாதிரை சிவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும். இங்குள்ள ராஜ சண்டிகேஸ்வரரை வணங்கினால் ராஜயோகமும், வடக்கு நோக்கிய விநாயகரை வணங்கினால் செல்வம் பெருகும். அஷ்டபுஜ துர்க்கையை மஞ்சள்புடவை அணிவித்து வணங்குவதால் கன்னிப்பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

அமைவிடம்

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email