Arul Isai

நலம் தரும் நவகிரக பாடல்கள் – Navagraha Songs

சூரியன்

சீலமாய் வாழச் சீரருள் புரியும்

ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி,

சூரியா போற்றி, சந்திரா போற்றி

வீரியா, போற்றி, வினைகள் களைவாய்

சந்திரன்

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்

திங்களே போற்றி, திருவருள் தருவாய்

சந்திரா போற்றி, சத்குரு போற்றி

சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி

செவ்வாய்

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே

நில குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ

மங்களச் செவ்வாய் மலரடி போற்றி

அங்காரகனே அவதிகள் நீக்கு.

புதன்

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு

புத பவானே பொன்னடி போற்றி

பதந்தந்து ஆள்வாய் பண்ணொளியானே

உதவியே அருளும் உத்தமா போற்றி

குரு

குணமிகு வியாழக் குரு பகவானே

மணமுடன் வாழ மகிழ்வுடன் அருள்வாய்

பிருகஸ்பதி வியாழப் பரகுரு நேசா

க்ரகதோஷம் இன்றிக் கடாஷத் தருள்வாய்

சுக்கிரன்

சுக்கிரமூர்த்தி சுபிகள் ஈவாய்

வக்கிரமின்றி வரமிகத் தருவாய்

வெள்ளிச் சுக்கிர வித்தக லேந்தே

அள்ளிக் கொடுப்பாய் அடியார் கருளே

சனி

 சங்கடம் தீர்க்கும் சனி பகவானே

மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்

சச்சரவின்றி சாகா நெறியில்

இச்சகம் வாழ இன்னருள் தா தா.

ராகு

அரவெறும் ராகு அய்யனே போற்றி

கரவாது அருள்வாய் கஷ்டங்கள் நீக்கி

ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி

ராகுக் கனியே ரம்மியா போற்றி

கேது

கேதுத் தேவே கீர்த்தித் திருவே

பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்

வாதம், வம்பு வழக்குகளின்றி

கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி.

Exit mobile version