அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.

இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின் தலவிருச்சம் நெல்லி, தலதீர்த்தம் கிருபா சமுத்திரம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம், எதிரில் நீராழி மண்டபத்துடன் குளம், ராஜகோபுரத்தைக் கடந்து உட்சென்றால் பிராகாரத்தில் விநாயகர் சந்நிதி. அடுத்து சுப்பிரமணியர், பைரவர், பஞ்சலிங்கங்கள், சனிபகவான், சந்திரன் முதலிய சந்நிதிகள் உள்ளன

வலம் முடித்து முன்மண்டபம் சென்றால் வலப்பால் நவக்கிரக சந்நிதியும் பள்ளியறையும் உள்ளன. சிவபெருமான் கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். சக்தியிடம் ஞானப்பால் அருந்திய ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது. திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு தன்னுடைய 63 சைவ அடியார்களும் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் செல்லும் வழியில் உச்சிக்காலமாகி விட்டதால் சிவபுரியில் தங்கினர். இவர்களின் பசியறிந்த இறைவன் பணியாளராக வந்து அறுசுவை விருந்து அளித்தார். ஆகையால் இத்தல இறைவன் உச்சிநாதர் என்று அழைக்கபடுகிறார்.

அமைவிடம்

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email