" அரியகோஷ்டி ஸ்ரீ அமிர்தநாயகி உடனுறை உத்தராபதீஸ்வரர் என்னும் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் அரியகோஷ்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அமிர்தநாயகி உடனுறை ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் ஆலயம்.
திருக்கோயிலின் அமைப்பு
இப்பழமையான சிவ ஆலயம், வயல்வெளிக்கிடையில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது, ஆலயத்தின் முகப்பில் அழகிய நந்தி சிலை பக்தர்களை வரவேற்கிறது, ஆலயத்தின் உள்நுழைந்தால் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார், வலப்புறம் முருகன் அருள்பாலிகிறார்.
கோவிலின் கோபுரம் மற்றும் பிற கட்டமைப்புகள் காலப் பிரவாகத்தால் மிகவும் சேதமடைந்துள்ளன. தற்காலத்தில் இக்கோவிலின் சரியான வரலாற்றுத் தகவல்களும் அல்லது இதன் ஆரம்ப காலத்தைப் பற்றிய தகவல்களும் முழுமையாக கிடைக்கவில்லை.
கோவில் நிலவமைப்புகளைப் வைத்து இக்கோவிலின் தொன்மையை உணர முடியும், ஆனால் அதை அமைத்த காலம் மற்றும் இதனைப் பற்றிய பழைய ஆவணங்கள் இன்று காணக்கிடைக்கவில்லை.
இப்பழமையான கோவிலின் அழகையும், ஆன்மீகத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்க, அதன் பழமைமிகு மரபை பாதுகாக்க தேவையான பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு வேலைகள் செய்யப்படுவது அவசியம்.