கனகதாரா ஸ்தோத்திரம்

நல்லதே நடக்க வேண்டும் - பாடல் வரிகள்

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி!

மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!

நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்

நேயத்தால் மெய்சிலிரத்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!

மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழி இரண்டை

மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்

காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று

கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே!

நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டு

நிற்பதும் பறப்ப தும்போய் நின்விழி மயக்கம் கொண்டு

கோலமார் நெடுமால் வண்ணக் குளிர்முகம் தன்னைக் கண்டு

கொஞ்சிடும் பிறகு நாணும் கோதையார் குணத்தில் நின்று!

ஏலமார் குழலி அந்த இருவிழி சிறிது நேரம்

என்வசம் திரும்புமாயின் ஏங்கிய காலம் சென்று

ஆலமா மரங்கள் போல அழிவிலாச் செல்வம் கொண்டு

அடியவன் வாழ்வு காண்பேன் அருள்செய்வாய் கமலத் தாயே!

SHARE: