சிவனாரை என்றைக்கும் சுமக்கும் பிரதோஷ நந்தி

நலம் சேர்க்கும் பிரதோஷ நந்தி - பாடல் வரிகள்

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி

சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி

கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி

கைலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி

பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி

பார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்தி

நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி

நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி

செங்கரும்பு உணவு மாலை அணியும் நந்தி

சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி

மங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்தி

மனிதர்களின் துயர் போக்க வந்த நந்தி

அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி

அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி

வரும் காலம் நலமாக வைக்கும் நந்தி

வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி

பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி

பேரருளை மாந்தருக்கு வழங்கும் நந்தி

வரலாறு படைத்து வரும் வல்ல நந்தி

வறுமையினைஎந்நாளும் அகற்றும் நந்தி

கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி

கீர்த்தியுடன் குலம் காக்கும் இனிய நந்தி

வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி

விதியினைத்தான் மாற்றிட விளையும் நந்தி

வேந்தன் நகர் செய்யினிலே குளிக்கும் நந்தி

வியக்க வைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி

சேர்ந்த திருப்புன்கூரிலே சாய்ந்த நந்தி

செவி சாய்த்து அருள் கொடுக்கும் செல்வ நந்தி

கும்பிட்ட பக்தர் துயர் நீக்கும் நந்தி

குடம் குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி

பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி

புகழ்குவிக்க எம் இல்லம் வருக நந்தி

காணொளி

நலம் சேர்க்கும் பிரதோஷ நந்தி பகவான் பாடலை வரிகளுடன் கேட்க, கீழுள்ள காணொளியை காணுங்கள்.

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email