சிவன் – தெய்வப் பாமாலை

சிவன் மந்திரம் - பாடல் வரிகள்

சிவாய நமச்சிவ லிங்காய நம ஓம் பவாய நம பவ லிங்காய நம ஓம் சர்வாய நம சர்வ லிங்காய நம ஓம் ருத்ராய நம ருத்ர லிங்காய நம ஓம் ஆத்மாய நம ஆத்ம லிங்காய நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்!

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே

வேதமோதி வெண்ணூல் பூண்டு வெள்ளையெருதேறிப் பூதஞ்சூழப் பொலிய வருவார் புலியினுரிதோலார்
நாதாவெனவும் நக்காவெனவும் நம்பாவென நின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே

மந்திரமாவது நீறுவானவர் மேலதுநீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திரு நீறே

SHARE: