கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள் கற்பூர நாயகியே! கனகவல்லி!காளி மகமாயி! கருமாரி அம்மா!பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!விற்கால வேதவல்லி விசாலாட்சி!விழிக்கோல மாமதுரை மீனாட்சி!சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!(கற்பூர)புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!(கற்பூர)உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்தஉறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்அன்னையவள்...