பன்னிரு கரத்தாய் போற்றி - பாடல் வரிகள்
மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்
அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய
செம்மலையலது உளம் சிந்தியாதரோ
திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம்
(நன்றி: தமிழிணையம் – மின்னூலகம் – http://bit.ly/திருவானைக்காப்புராணம்)
மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி!
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி போற்றி!!
திரு முருகன் துதி, கச்சியப்பர் அருளிய கந்தபுராணம்
(நன்றி: தினமணி – http://bit.ly/கந்தபுராணம்)
பன்னிரு கரத்தாய் போற்றி பசும்பொன்மா மயிலாய் போற்றி!
முன்னிய கருணை ஆறு முகப் பரம் பொருளே போற்றி!
கன்னியர் இருவர் நீங்காக்கருணைவா ரிதியே போற்றி!
என்னிரு கண்ணே கண்ணுள் இருக்குமா மணியே போற்றி!
திருச்செந்தூர் புராணம்
(நன்றி: நூலகம் டாட் நெட் – http://bit.ly/திருச்செந்தூர்_புராணம்)
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன்
பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே!
புலவர் பெருமான் நக்கீரர் அருளிய “திருமுருகாற்றுப்படை”
(நன்றி: விக்கிமூலம் – http://bit.ly/திருமுருகாற்றுப்படை)
காணொளி
பன்னிரு கரத்தாய் போற்றி பாடலை வரிகளுடன் கேட்க, கீழுள்ள காணொளியை காணுங்கள்.