
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள்
ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்று
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்று
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்று
மாறுபடு சூரரை வதைத்த முகமொன்று
வள்ளியை மணம்புணர வந்த முகமொன்று
ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே
பாடல் தொகுப்பு: திருப்புகழ்
இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான்