
சரணம் முருகையா - பாடல் வரிகள்
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே
அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே
தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
புதன் கிழமை உன்னைத் தேடி சுவாமி மலைக்கும் வந்தேனே
அப்பன் மகிழ மந்திரம் சொன்ன அழகைக் கண்டு வியந்தேனே
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
வியாழக்கிழமை உன்னை தேடி பழமுதிர் சோலையும் வந்தேனே
பழத்துக்காக கிழவன் ஆன கதையை கேட்டு மகிழ்ந்தேனே
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
வெள்ளிக்கிழமை உன்னைத் தேடி திருத்தணி மலைக்கும் வந்தேனே
சாந்தம் தவழும் திருமுக தரிசனம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
சனிக்கிழமை உன்னைத் தேடி பழனி மலைக்கும் வந்தேனே
பஞ்சாமிர்தம் பாலில் தேனில் குளித்திடும் அழகை கண்டேனே
சாமியே சரணம் சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
ஞாயிற்றுக்கிழமை உன்னைத் தேடி நானும் புறப்படும் வேளையிலே
வேலுடன் மயிலுடன் நேரில் வந்தாய் என்னே உந்தன் கருணையப்பா
சாமியே சரணம்
சாமியே சரணம்
சரணம் சரணம் முருகையா
காணொளி
கமலா பழனியப்பன் ஆச்சி அவர்களின் தெய்வீக குரலில் சரணம் முருகையா பாடலை வரிகளுடன் கேட்க, கீழுள்ள காணொளியை காணுங்கள்.