ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - பாடல் வரிகள்

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி

சிவசக்தி ரூபினி கல்யாணி நீ 

ஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரி 

உன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரி  

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

                                           

இரு கைகளால் தொடுத்த பூமாலைகள் 

இதயத்தினால் தொடுத்த பாமாலைகள் 

அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா 

அடியேனை எந்நாளும் காப்பாயம்மா

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

அம்மா என் இல்லத்தில் அடியெடுத்து வா 

அழகான வெண்கொற்றை குடைபிடித்து வா 

சும்மா நீ வரலாமோ பகை முடித்து வா 

துயரங்கள் யாவினுக்கும் விடை கொடுத்து வா

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

செந்தாமரை பூவில் ஸ்ரீதேவியாம் 

சிங்கத்தில் ஏறி வந்தாள் மாகாளியாம் 

வெண்தாமரை பூவில் மகரணியாம் 

விண்ணோடும் மண்ணாலும் கலைவாணியாம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

தீர்த்தங்கள் அத்தனையும் கமலாலயம் 

தீபம் தெரிந்த இடம் அருணாச்சலம் 

வாய்த்த சபைகள் எல்லாம் பொன்னம்பலம் 

மாதா பராசக்தி நீ என் பலம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

தாய் நீ மனம் வைத்தால் தங்கம் வரும் 

தனி வழிக்கு துணையாக சிங்கம் வரும் 

சேய்வீட்டில் கல்யாண மேளம் வரும் 

திருநாட்டை அரசாளும் யோகம் வரும்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

காணொளி

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி பாடலை வரிகளுடன் கேட்க, கீழுள்ள காணொளியை காணுங்கள்.

SHARE: