ஆடுக ஊஞ்சல் ஆடுகவே - முருகன் பாடல் வரிகள் ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆழிப் படுக்கை கொண்டோனின்அருமை மருகா ஆடுகவேஊழி தாண்டி நிற்பானின்உத்தமச் செல்வா ஆடுகவேவாழும் மனிதர் யாவருக்கும்வழிக்குத் துணையாம் வேலவனேஆளும் கவலை ஓடிடவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டுஅதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் அடியார் ஆட்டிடவேகுமரா ஊஞ்சல் ஆடுகவேபாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவேவாடிடும் பயிர்கள் வளம் பெறவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேமுன்னே பின்னே...

