அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை

அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை - பாடல் வரிகள்

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

பாரத பூமியிலே பாதயாத்திரை அந்த பழனிமுருகன் பெயர்பெற்ற பாதயாத்திரை

பினாங்கில் பித்தனவன் புத்திரர்க்கு பூசத்தில் புகழான பாதயாத்திரை

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

மலைவளம் மிகுந்த மலேசியா மண்ணிலே மகா சக்தி மகுடம் சூடும் பாதயாத்திரை

மாந்தர்கள் மேன்மையுர மாதரசி மணவாளனுக்கு மங்களமான பாதயாத்திரை

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அலோர்ஸ்டாரிலிருந்து அபிஷேக ஆராதனையோடு ஆடி வரும் ஆனந்தமான பாதயாத்திரை

அழியா ஆன்மா அழகுற ஆனந்த அற்புதமாய் ஆடி வரும் ஆன்மீக யாத்திரை 

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

சித்த சற்குருநாதர் சரஹணபவானந்த சக்தியுடன் செல்லுகின்ற சிங்காரமான பாதயாத்திரை

சரவணனுக்கு சண்முக கவசம் சந்தோஷமாய் சொல்லுகின்ற செல்வமலர் பாதயாத்திரை

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

தேன் சொட்டும் தண்ணீர்மலை தண்டபாணி தந்திட்ட தன்னிகரில்லா தெய்வீக பாதயாத்திரை

தேரோடும் தெருவினிலே தேங்காய்கள் தூளாக தேகம் தூய்மைபெறும் பாதயாத்திரை

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

ஆன்டி அரசனுக்கு அன்போடு அன்பர்கள் அண்டி நடக்கும் ஆனந்தமான பாதயாத்திரை

ஆனந்தமாய் அடிவைக்கயிலே அன்பான அன்பர்கள் அளித்திடும் அன்னதான பாதயாத்திரை

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

பாமாலை பரவசமாய் பாடியாடி  பீடோங்கும் ஊஞ்சலிலே பெருமானை ஆட்டும் யாத்திரை

பாசம் நீக்கி பசுபதியையுடைய பீடுநடை போடும் புண்ணிய யாத்திரை

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே

காணொளி

கமலா பழனியப்பன் ஆச்சி அவர்களின் தெய்வீக குரலில் தண்ணீர்மலை பாதயாத்திரை பாடலை வரிகளுடன் கேட்க, கீழுள்ள காணொளியை காணுங்கள்.

SHARE: