கோவிந்த நாம சங்கீர்தனம் – திருநாம பதிகம்

திருநாம பதிகம் - கோவிந்த நாம சங்கீர்தனம் - பாடல் வரிகள்

கோவிந்த நாம சங்கீர்தனம் கோவிந்தா கோவிந்தா!!

ஆதிபரஞ் சோதியா யண்டபதி ரண்டமாய் அநாதியாய் நின்ற நாமம்

அடிமுடியி னடுவாகி எளியவன் களிகூற வன்புவைத் திருத்த நாமம் 

நீதிநெறி யாகவே மணிபூர கந்தணில் நிலையாக நின்ற நாமம்

நேசமுடனே கருட வாகனமீ தேரியே நின்று விளையாடு நாமம்

வீதி வெளியாகவே உச்சிமலை மீதினில் விளக்கொளியில் நின்ற நாமம்

மேலாம் பதத்தையும் நாலாம் பதத்தையும் விளங்கக் கொடுக்கு நாமம்

நாதாந்தபேரொளிய தாகவே விளங்கிடு நமோ நமோவென்ற நாமம்

நாராயணாஹரி கோவிந்தா வென்று தினம் நாடிவரு திருநாமமே!              

ஹரிநமோ வென்றுரைப் போர்க்குமே பாண்டவர்கள் அருள்வாகி நின்ற நாமம்

அர்ச்சுனர்க்காகவே கதிரோனை மறைத்து நல்லரசு நிலை வைத்த நாமம்

பரிவான கிருஷ்ணாவதாராத்திற் பூதகி பருத்தமுலை யுண்ட நாமம்

பாரினில் கல்லினை மிதித்துப் பெண்ணாகவே பண்பருள் புரிந்த நாமம்

திருமேவு பிரகலா தனன்றனக் காக நர சிங்கமுகமான நாமம்

தேவாதி தேவரை யிடுக்கண்வைத்தோர்களைத் திறைகொண்டிருந்த நாமம்

கருவாகி யுருவாகி திருவாகி மருவாகிக் காட்சி தந்திட்ட நாமம்

கரியீச பிரகாச திருநேச பரவாச கருணைதரு திருநாமமே!                

முன்னாளிலேசிவன் றிருக்கையிற் பாணமாய்முப்புர மெரித்த நாமம்

முதலைவாய் சிக்கியமக்கரிக் கந்நாளிலாதி மூலமாய் நின்ற நாமம்

பொன்னான ருக்மணி தேவி கல்யாணத்திற்போராய்த் துலைத்த நாமம்

பூதப் பிசாசு பில்லிசூனியமுதல் யாவுமே பொய்யாகிவிட்ட நாமம்

சின்னபினங்களா யிராவணன் சிர சினைத்திட்டமுடனரிந்த நாமம்

சிரஞ்சீவியாகவே விபீஷ்னன் றனக்குமே ஜெயபட்ட மீந்த நாமம்

கன்னிவயதாகவே கருணா சமுத்ரத்திற் காட்சி தந்தருளு நாமம்

கரியீச பிரகாச திருநேச பரவாச கருணைதரு திருநாமமே!       

காணொளி

கோவிந்த நாம சங்கீர்தன பாடலை வரிகளுடன் கேட்க, கீழுள்ள காணொளியை காணுங்கள்.

SHARE: