முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!!

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! பாடலை கேட்க, 

0:00 / 0:00
முத்துக்குமரா வா! வா!!

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! - பாடல் வரிகள்

முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! 

செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித் தா! தா!!

புள்ளூர் வாழும் முருகனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் 

பொன்னும் தருவான் பொருளும் தருவான் அள்ளிக் கொள்ளுங்கள் 

புள்ளிமயிலோன் வள்ளி மணாளன் புகழைப் பாடுங்கள்

வள்ளிக் கணவன் அள்ளித் தருவான் வாங்கிக் கொள்ளுங்கள்

காட்டுப் பாதை வண்டிகள் கட்டி கால்நடைப் போடுங்கள் 

காட்டுவான் பாதை கந்தன் நம் வாழ்வில் கவலையைத் தள்ளுங்கள்

செந்தூர் கந்தன் சீரலைவாயில் சிரிப்பதைப் பாருங்கள்

இந்தூர் கந்தன் இன்பம் தருவான் ஏற்றுக்கொள்ளுங்கள் 

சக்தியின் மைந்தன் சண்முகநாதனை அர்ச்சனை செய்யுங்கள் 

வைத்திய செல்வன் வளமாய்த் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள்

அண்ணனின் தம்பி அருமைச் செல்வன் அழகைப்பாருங்கள் 

வள்ளல் குமரன் வாரித் தருவான் வாங்கிக்கொள்ளுங்கள் 

சித்திரை மாதம் பௌர்ணமி நிலவாய் சிரிப்பதை பாருங்கள் 

பத்தரை மாற்றுத் தங்கம் அவனை பற்றிக் கொள்ளுங்கள்

முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! 

செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித் தா! தா!! 

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !

பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே 

சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் 

எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி

ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து

எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென

அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கி  உக்கியிட்டு

எள்ளவும் சலியாத எம் மனதை உமதாக்கி 

தெள்ளியனாய் தெளிவதற்கு தேன் தமிழில் மாலையிட்டு 

உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்

நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க

பொன்வயிற்று கணபதியே போற்றியெனப் போற்றுகின்றேன்!

SHARE: