Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - Arul Isai

மங்களத்து நாயகனே – விநாயகர் துதி

மங்களத்து நாயகனே பாடலை கேட்க,

Listen to the Song by Clicking on Play Button! 👇
0:00 / 0:00
மங்களத்து நாயகனே

மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள்

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !

பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே 

சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் 

எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி

ஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து

எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென

அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கி  உக்கியிட்டு

எள்ளவும் சலியாத எம் மனதை உமதாக்கி 

தெள்ளியனாய் தெளிவதற்கு தேன் தமிழில் மாலையிட்டு 

உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்

நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க

பொன்வயிற்று கணபதியே போற்றியெனப் போற்றுகின்றேன்!

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email