பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்

பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 13 கிமீ தொலைவிலுள்ள பேரையூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.  திருக்கோயிலின் அமைப்பு கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது, பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம்...