பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளத்தூரில் வயல்வெளிகளுக்கிடையே அமைந்துள்ளது இத்திருக்கோயில். அளகஞ் செட்டியார் காளி ஆயா படைப்பைச் சேர்ந்த இரணியூர் கோவில் ஏழு ஊர் பங்காளிகளுக்கு இக்கோவிலுள்ள பாலவிளத்தய்யனார் குலதெய்வமாக விளங்குகிறார். திருக்கோயிலின் அமைப்பு கோயிலின் உள்நுழைந்ததும் இடது புறத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதியும் அதனருகில் அழகிய தெப்ப குளமும் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் ஸ்ரீ...
அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்
அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...