தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர

0:00 / 0:00
தங்கரதம் ஒன்று இங்கு

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர - பாடல் வரிகள்

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர 

செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க 

நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் 

நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

தேவரெல்லாம் கூடி நின்று வடம் பிடிக்க 

தென்பழநி வலம் வரும் தங்கரதமாம் 

தங்கரதம் மீதமர்ந்து கொலுவிருக்கும் 

தண்டபாணித் தெய்வமே சரணமய்யா

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

வண்ண மயில் வாகனத்தில் வேல்முருகன்

வள்ளி தெய்வயானையுடன் மால் மருகன் 

தென்னகத்தில் வாழுகின்ற சிலை அழகன் 

என்னகத்தில் காட்சி தந்தான் கலை அழகன் 

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

கொக்கரக்கோ சேவல் ஒன்று கூவிவர

கோலமயில் நின்று நடமாடி வர

சுப்பையா நானடிமை பாடிவர 

சொக்கன் மகன்நீ அதனைக் கேட்டு வர

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

பழனி பரங்குன்றம் திருச்செந்தூர் 

பழமுதிர்ச் சோலையுடன் சுவாமி மலை 

அழகிய திருத்தணிகை மருதமலை

ஆலயங்கள் யாவும் காட்டுவித்தான்

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

சந்தமிகு செந்தமிழில் மாலை தொடுத்தேன் 

செந்தில் வளர் கந்தனிடம் தூது விடுத்தேன் 

அந்தமிகு குகன் நெஞ்சில் இடம் பிடித்தேன் 

ஆறுமுகன் பேரழகை படம் பிடித்தேன் 

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

பன்னீரும் சந்தனமும் பாற்குடமாம்

பஞ்சாமிர்தம் விபூதி அபிஷேகம் 

கொஞ்சு தமிழ் பாலனுக்குப் பழநியிலே 

கோடிக்கண்கள் வேண்டுமய்யா காண்பதற்கே

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

வெந்நீறும் நெற்றியிலே பளபளக்க 

வெண்ணிலவு கண்களிலே சிலுசிலுக்க 

பன்னீரும் மார்பினிலே கமகமக்க 

பார்வதியின் பாலன் வந்தான் மனம்களிக்க 

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

முருகாயென அழைத்தேன் முறுவல் கண்டேன்

குமராயென அழைத்தேன் குளுமை கண்டேன்

கந்தாயென அழைத்தேன் களித்து நின்றான்

கடம்பாயென அழைத்தேன் களித்து நின்றான்

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

காவடிகள் உன்னைத்தேடி ஆடி வரும் 

கால்நடையாய் பக்தர் கூட்டம் கோடி வரும் 

சேவடியே சரணமென வாழ்பவர்க்கே 

செல்வ நலம் தந்தருளும் கந்த வேளே

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

நல்ல தமிழ்ச் சொல்லெடுத்து நாளும் பாடு 

நம் தலைவன் முருகனையே நாடி ஓடு 

வல்ல கதிர் வேலவனும் வள்ளியோடு 

வந்து நலம் தந்தருள்வான் வகையோடு 

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

அஞ்சு வகைக் கனியெடுத்து அமுது செய்வோம் 

ஆறுமுகன் மேனியிலே தொழுது பெய்வோம் 

கொஞ்சும் எழில் குமரனுக்கு பூக்கள் கொய்வோம் 

கூறு தமிழ்ச் சொல்லெடுத்து பாக்கள் நெய்வோம் 

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

தண்ணாரும் பழனிமலை நடந்து செல்வோம்

சாலைவழி துன்பமெல்லாம் கடந்து செல்வோம்

கண்ணான முருகனையே கொஞ்சி மகிழ்வோம்

கருணை மழை பொழிகவென கெஞ்சி கேட்போம்

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

கல்லழுத்தி தாருரித்து தோலும் தேயும் 

காலிரண்டும் கொப்பளித்து கன்னிப்போகும் 

வெல்லமென கந்தனவன் பெயரைக்கூவ 

வேதனைகள் தீர்ந்து நடை வேகம் கூடும் 

முருகா முருகா வேல் முருகா 

முருகா முருகா வேல்முருகா 

கந்தனையே சொந்தமென எண்ணும்போது 

கவலையென்னும் கடலதுவும் வற்றிப்போகும்

சிந்தனையில் தெளிவுவரும் செல்வம் சேரும்

செருமுனையில் பகையழிந்து வெற்றி கூடும்

முருகா முருகா வேல்முருகா 

முருகா முருகா வேல் முருகா

SHARE: