Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

அழகு அழகு அழகு முருகன் அழகு - Arul Isai

அழகு அழகு அழகு முருகன் அழகு

Listen to the Song by Clicking on Play Button! 👇

0:00 / 0:00
முருகன் அழகு

அழகு அழகு அழகு முருகன் அழகு - பாடல் வரிகள்

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! 

அழகு அழகு அழகு அவன் கருணை அழகு! (2) 

தென்பழநி ஆண்டவனே! 

தேவர் சிறை மீட்டவனே (2) 

கண் திறந்து என்னை நீயும் 

காத்தருள வேண்டுமய்யா (அழகு) 

உன்னையே நம்பி வந்தேன்! 

உள்ளுருகி பாடி வந்தேன் (2) 

உன் கோயில் நாடி வந்தேன் 

உன் அருளைத் தேடி வந்தேன் (அழகு) 

கண்டவுடன் பக்தி வரும் ! 

காவடியைச் சுமந்து வந்தேன் (2) 

கால் நடையாய் நடந்து வந்தேன் 

கவலைகளை மறந்து வந்தேன் (அழகு) 

பால் குடத்தை ஏந்தி வந்தேன்! 

பாத வலி மறந்து வந்தேன் (2) 

கந்தா உன் பேரழகைக் 

கண் குளிர காண வந்தேன் (அழகு) 

வேலோடு நடந்து வந்தேன்! 

வேதனையை மறந்து வந்தேன் (2) 

வேலா உன் பதம் தொழுது 

வேண்டும் வரம் கேட்க வந்தேன் (அழகு) 

அருளாடி உருவினிலே! 

ஆறுமுகா வந்திடுவாய் (2) 

அறு கால் சவுக்கையிலே 

பிரம்பெடுத்து ஆடிடுவாய் (அழகு) 

அன்னமிடும் மடத்தினிலே! 

நீ இருக்கும் பேரழகை (2) 

ஆண்டவனே உனதருளால் 

கண்டு நான் மகிழ்ந்திடுவேன் (அழகு) 

எந்தன் உயிர் காவலனே! 

எங்கும் நிறை வேலவனே (2) 

என்னை நீயும் ஆண்டு கொண்டு 

ஏற்றமுற செய்திடுவாய் (அழகு) 

அருளாடி அழைத்து வரும்! 

காவடியை பால் குடத்தை (2) 

அன்புடனே ஏற்றுக்கொள்வாய் 

அடியவர்க்கு வரமளிப்பாய் (அழகு) 

சொந்தமுடன் நான் அழைக்க! 

வந்திடுவாய் பழனி வேலா (2) 

கண் திறந்து என்னை நீயும் 

காத்தருள வேணுமய்யா 

அழகு அழகு அழகு நம் முருகன் அழகு! 

அழகு அழகு அழகு அவன் கருணை அழகு!

காணொளி

கமலா பழனியப்பன் ஆச்சி அவர்களின் தெய்வீக குரலில் அழகு அழகு அழகு முருகன் அழகு பாடலை வரிகளுடன் கேட்க, கீழுள்ள காணொளியை காணுங்கள்.

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email