ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆவுடையார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு யோகாம்பிகை உடனுறை ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில். திருக்கோயிலின் அமைப்பு இக்கோவில், சிற்பக்கலைக்கும் கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற தலமாகும். மேலும் வழக்கமான சிவன் கோவில்களின் கட்டமைப்பும், துணைத் தெய்வ வழிபாடுகளும் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது.தேவாரப் பாடல் பெற்ற இந்த பழமையான திருத்தலம்....
பழமை வாய்ந்த அரியகோஷ்டி ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்
" அரியகோஷ்டி ஸ்ரீ அமிர்தநாயகி உடனுறை உத்தராபதீஸ்வரர் என்னும் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் அரியகோஷ்டி என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அமிர்தநாயகி உடனுறை ஸ்ரீ உத்தராபதீஸ்வரர் ஆலயம். திருக்கோயிலின் அமைப்பு இப்பழமையான சிவ ஆலயம், வயல்வெளிக்கிடையில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது, ஆலயத்தின் முகப்பில் அழகிய நந்தி சிலை பக்தர்களை வரவேற்கிறது, ஆலயத்தின் உள்நுழைந்தால் சிவபெருமான் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார், வலப்புறம் முருகன்...
” செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் ” சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில்
" செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் " சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் கீழச்சிவல்பட்டி அருகே இரணியூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில். இரணியனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், 'இரணியூர்" என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் அமைப்பு பெரிய ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் மகா மண்டபம், அஷ்ட லட்சுமி மண்டபம் ஆகியவற்றுடன் அழகுற...
சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்
சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகரம் பரங்கிப்பேட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல், சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலமாக விளங்குகிறது. திருக்கோயிலின் அமைப்பு அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்தின் கீழே கருங்கல்லாலான மீன் உருவம் காணப்படுகிறது....
பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில்
பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளத்தூரில் வயல்வெளிகளுக்கிடையே அமைந்துள்ளது இத்திருக்கோயில். அளகஞ் செட்டியார் காளி ஆயா படைப்பைச் சேர்ந்த இரணியூர் கோவில் ஏழு ஊர் பங்காளிகளுக்கு இக்கோவிலுள்ள பாலவிளத்தய்யனார் குலதெய்வமாக விளங்குகிறார். திருக்கோயிலின் அமைப்பு கோயிலின் உள்நுழைந்ததும் இடது புறத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதியும் அதனருகில் அழகிய தெப்ப குளமும் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் ஸ்ரீ...