” செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் ” சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில்​

" செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் " சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் கீழச்சிவல்பட்டி அருகே இரணியூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில். இரணியனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், 'இரணியூர்" என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் அமைப்பு பெரிய ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் மகா மண்டபம், அஷ்ட லட்சுமி மண்டபம் ஆகியவற்றுடன் அழகுற...

சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்

சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகரம் பரங்கிப்பேட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல், சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலமாக விளங்குகிறது.   திருக்கோயிலின் அமைப்பு அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்தின் கீழே கருங்கல்லாலான  மீன் உருவம் காணப்படுகிறது....

மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர்

மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமானை பொதுவாக யானை முகத்தோடு காட்சிதருவதை பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால் அபூர்வமாக யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், தமிழகத்தில் பூலோக கைலாசம் எனப்படும் தில்லை மாநகரான சிதம்பரத்திலும், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கின்றார். தேரோடும் வீதியான சிதம்பரம் தெற்கு...

பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில்

பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளத்தூரில் வயல்வெளிகளுக்கிடையே அமைந்துள்ளது இத்திருக்கோயில். அளகஞ் செட்டியார் காளி ஆயா படைப்பைச் சேர்ந்த இரணியூர் கோவில் ஏழு ஊர் பங்காளிகளுக்கு இக்கோவிலுள்ள பாலவிளத்தய்யனார் குலதெய்வமாக விளங்குகிறார். திருக்கோயிலின் அமைப்பு கோயிலின் உள்நுழைந்ததும் இடது புறத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதியும் அதனருகில் அழகிய தெப்ப குளமும் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் ஸ்ரீ...

பதஞ்சலி முனிவர் வழிபட்ட சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில்

பதஞ்சலி முனிவர் வழிபட்ட சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமகாக விளங்கும் சிதம்பரத்தில் அனந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.. இக்கோவில் நடராஜர் கோவிலுக்கு நேர் பின்புறமாக அமைந்துள்ளது இக்கோவிலில் மூலவர் அனந்தீஸ்வரர், அம்மன் சவுந்தரநாயகி. உற்சவர் சோமாஸ்கந்தர். கோவில் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கெஜலெஷ்மி சனீஸ்வரர், நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளது.சிவன் சன்னதி கோஷ்டத்தில் வல்லபகணபதி தெட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா உள்ளனர். இங்கு நடராஜருக்கு...

திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் – சிவபுரி பைரவர் கோயில்​

திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் - சிவபுரி பைரவர் கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது. இறைவனின் பெயர் பால்வண்ண நாதர், இறைவியின் பெயர் வேதநாயகி. இத்தலத்தின் தலவிருச்சம் வில்வம், தலதீர்த்தம் கொள்ளிடம்.கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால்...