அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் - பாடல் வரிகள்

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்

அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்

தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள்முருகன்

சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்

காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்

முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்

கருணையே வடிவான முருகன் பாருங்கள்

நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்

சண்முகமாய் ஒளிவீசும் அழகைப் பாருங்கள்

முருகன் சங்கடங்கள் தீர்த்துவைக்கும் அழகைப் பாருங்கள்

அரோகரா என்று சொல்லிப் பாட்டுப்பாடுங்கள்

அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்

வேலும் மயிலும் துணையெனவே அழைத்துப் பாருங்கள்

முருகன் வேலெடுத்து ஆடிவரும் அழகைப் பாருங்கள்

குன்றுதோறும் ஆடிவரும் குமரன் பாருங்கள்

அவன் கன்றுபோலத் துள்ளிவரும் ஆட்டம் பாருங்கள்

பழத்துக்காக சண்டைப் போட்ட பாலன் பாருங்கள்

முருகன் பண்டாரமாய் வந்துநிற்கும் கோலம் பாருங்கள்

பொட்டியிலே ஜடையிருக்கும் அழகைப் பாருங்கள்

முருகன் உள்ளங்கையில் வேலிருக்கும் அழகைப் பாருங்கள்

நெற்றியிலே நீர் இருக்கும் அழகைப் பாருங்கள்

அந்த வெற்றிவடிவேலன் வரும் அழகைப் பாருங்கள்

உண்டியலில் பணமில்லையா செந்தில் நாயகா

உனக்கு உடுத்திக்கொள்ள பட்டில்லையா பழனியாண்டவா

ஏனென்று கேட்டுபார்க்க சேர்ந்து வாருங்கள்

முருகன் எல்லாத்திற்கும் சிரித்து நிற்கும் அழகைப் பாருங்கள்

வேலெடுத்து ஆடிவரும் வேலன் பாருங்கள்

முருகன் விதவிதமாய் மயிலேறும் அழகைப் பாருங்கள்

வண்ண மயிலாடிவரும் ஆட்டம் பாருங்கள்

குறவள்ளி மணவாளன் வரும் அழகைப் பாருங்கள்

தள்ளாத கிழவன் வாரார் விலகி நில்லுங்கள்

அவன் தாடிமீசை நரைத்திருக்கா பார்த்துச் சொல்லுங்கள்

பல்லுப்போன கிழவன் வாரார் பாரார் உஷாரு

அவர் பக்கதிலே வள்ளியம்மை ரெம்பவும் ஜோரு

வள்ளி தெய்வயானையுடன் முருகன் பாருங்கள்

அவன் வண்ணமயில் ஏறிவரும் அழகைப் பாருங்கள்

முல்லை பூப்போல் சிரித்துவரும் காட்சி பாருங்கள்

அதில் எல்லையில்லா பேரின்பமும் இங்கே பாருங்கள்

கோலாகல வள்ளியம்மை கூடப் பாருங்கள்

நாம் கொண்டாடும் தெய்வானை அருகில் பாருங்கள்

சக்தி அவள் தந்ததிருவேலைப் பாருங்கள்

முருகன் சந்தோஷமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்

ஆலோலம் பாடுகின்ற வள்ளி பாருங்கள்அங்கே

அவளுக்காக கிழவன் ஆடும் ஆட்டம் பாருங்கள்

தாலாட்டு பாடலாமா கேட்டுப் பாருங்கள்

நம்ம தருமதுறை சிரித்து மகிழும் அழகைப் பாருங்கள்

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்

அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்!

SHARE: